தமிழ்நாடு
முல்லை பெரியாறு அணை

மழை ஓய்ந்ததால் 136 அடியாக குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2022-01-24 06:16 GMT   |   Update On 2022-01-24 06:16 GMT
மழை ஓய்ந்த நிலையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக குறைந்துள்ளது.
கூடலூர்:

வடகிழக்கு பருவமழை கைகொடுத்த நிலையில் முல்லை பெரியாறு அணை 142 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து 50 நாட்களாக 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்பட்டது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை நிலவரப்படி 182 கனஅடி நீர் மட்டுமே வந்துகொண்டிருக்கிறது. இருந்த போதும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனம் மற்றும் தேனி மாவட்ட குடிநீருக்காக அணையிலிருந்து 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் நீர்மட்டம் சீராக சரிந்து 136.25 அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 69.67 அடியாக உள்ளது. 608 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 719 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.40 அடியாக உள்ளது. 36 கனஅடி நீர் வருகிறது. 80 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வருகிற 25 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News