தமிழ்நாடு
மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

3-வது முறையாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு: காசிமேட்டில் இன்று மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

Published On 2022-01-22 05:59 GMT   |   Update On 2022-01-22 05:59 GMT
3-வது முறையாக (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் நாளைய தேவைக்காக மீன்களை வாங்க காசிமேட்டில் ஏராளமான பொதுமக்களும் வியாபாரிகளும் இன்று குவிந்தனர்.

ராயபுரம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நாளை 3-வது முறையாக (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் நாளைய தேவைக்காக மீன்களை வாங்க காசிமேட்டில் ஏராளமான பொதுமக்களும் வியாபாரிகளும் இன்று குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை மாத அய்யப்ப பக்தர்கள் விரதம் தைப்பூசம் என இந்து பண்டிகை விரத நாட்கள் முடிந்ததால் தற்போது மீன்களை வாங்குவதற்காக காசிமேட்டில் கூட்டம் குவிந்துள்ளது.

நாளை முழு ஊரடங்கு என்பதால் நாளைய தேவைக்காக மீன்களை பதப்படுத்தி வைத்து சமைப்பதற்காக இன்றே காசிமேட்டில் மக்கள் கூட் டம் படையெடுத்தனர்.

மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக குறைந்த அளவு எண்ணிக்கையிலான விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றதால் மீன் வரத்து குறைவாகவே காணப்பட்டது இதனால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காசிமேட்டில் நேரக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இருந்தபோதிலும் கட்டுப்பாடுகள் காற்றில் பறந்து பொதுமக்கள் மொத்த வியாபாரிகள் சிறு வியாபாரிகள் என அனைவரும் குவிந்ததால் காசிமேடு திருவிழா போல காட்சி அளிக்கிறது.

காசிமேடு மீன் சந்தையில் வஞ்சிரம் நேற்று 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய வகை வஞ்சிரம் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெரிய வகை வஞ்சிரம் 1000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சங்கரா 350 ரூபாயில் இந்து 500 ரூபாய்க்கும், நெத்திலி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 400 ரூபாய்க்கும், வவ்வால் 500 ரூபாய்க்கு விற்பனை செய்ய பட்டவை 800 ரூபாய்க்கும், கடம்பா 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 550 ரூபாய்க்கும் இறால் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 600 ரூபாய்க்கும் பாறை 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 600 ரூபாய்க்கும் நண்டு 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கொடுவா 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டவை 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News