தமிழ்நாடு
கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க குவிந்த மக்கள்.

கோவையில் பூக்களின் விலை கடும் உயர்வு

Published On 2022-01-22 05:36 GMT   |   Update On 2022-01-22 05:36 GMT
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
கோவை:

கோவை பூ மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பூக்கள் விற்பனைக்கு வரும். இதனை கோவையைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு பெய்து வருவதால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. முதல்தர மல்லிகைப்பூ ஒரு கிலோ 2,600 முதல் 3000 ரூபாய்க்கும், முல்லை ஒரு கிலோ 1600 முதல் 2000 ரூபாய்க்கும், காக்கடா பூ ஒரு கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதுதவிர செவ்வந்தி கிலோ 120க்கும், சம்மங்கி கிலோ 80 ரூபாய்க்கும், அரளி 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இதுகுறித்து கோவை பூ கடை விற்பனையாளர் சுனில் கூறியதாவது:-

தற்போது பெய்து வரும் கடும் பனி காரணமாக பூக்கள் செடியிலேயே அழுகி விடுகின்றன. இதனால் வரத்து மிக குறைவாக உள்ளது.

தற்போது பனிக்காலம் நிறைவு பெறவுள்ள தருணத்தில் கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பூக்கள் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மல்லிகை பூ மட்டும் சத்தியமங்கலத்தில் இருந்து குறைவான அளவிலேயே வருகிறது. இதனால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுக்கு இப்போது 3 டன் பூக்கள் விற்பனைக்கு வரும். தற்போது ஒரு டன் அளவிலான பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. பனிக்காலம் நிறைவடைய உள்ளதால் பூ விலை குறையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News