தமிழ்நாடு
ஜி.கே.வாசன்

மத்திய பட்ஜெட் வறுமையை ஒழித்து வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2022-01-19 04:01 GMT   |   Update On 2022-01-19 04:01 GMT
மத்திய பட்ஜெட்டில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் வன்கொடுமை ஏற்படாத வகையில் கடுமையான நடவடிக்கையும், பாதுகாப்பும் இருக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கும் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டானது தற்போதைய அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் வகையில் அமைய வேண்டும்.

கொரோனா உள்ளிட்ட புதிய புதிய வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து, மாத்திரை உள்ளது என்ற நிலையை ஏற்படுத்த மருத்துவத்திற்கு, கண்டுபிடிப்புக்கு, தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நாட்டில் வறுமை இல்லாத, ஏழ்மையை அகற்றக்கூடிய நிலைக்கு சிறப்புத் திட்டங்கள் இருக்க வேண்டும். வேளாண் பயிர்களுக்கு ஆதரவு விலையை உறுதிப்படுத்தி, விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் பெருக வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள்,  வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் ஆகியோரது வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடிய பட்ஜெட் தேவை.

குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் வன்கொடுமை ஏற்படாத வகையில் கடுமையான நடவடிக்கையும், பாதுகாப்பும் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட வேண்டிய மத்திய அரசுப் பணியிடங்களை அவ்வப்போதே பூர்த்தி செய்ய வேண்டும். நாட்டில் லஞ்சம், ஊழல் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

எனவே மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கும் மத்திய பட்ஜெட்டானது வறுமையை ஒழித்து, வருவாயைப் பெருக்கி, தொற்று நோய் ஒழிப்புக்கு மருந்தை உண்டாக்கி நாட்டு மக்களையும், நாட்டையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டாக அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News