வாழப்பாடி ராமமூர்த்தி சிலைக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிறந்த நாள்- வாழப்பாடி ராமமூர்த்தி சிலைக்கு விஜய் வசந்த் எம்.பி. மரியாதை
பதிவு: ஜனவரி 18, 2022 16:44 IST
வாழப்பாடி ராமமூர்த்தி சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன், வர்த்தக காங்கிரஸ் மாநில செயல் தலைவர் எம் ஜி ராமசாமி, தென்சென்னை மத்திய மாவட்ட தலைவர் முத்தழகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் இலா பாஸ்கரன், மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவி மலர்கொடி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :