தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

Published On 2022-01-13 04:10 GMT   |   Update On 2022-01-13 04:10 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2060 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து விநாடிக்கு 2096 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு இன்று மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 2060 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து விநாடிக்கு 2096 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 115.71 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 115.21 அடியானது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News