தமிழ்நாடு
அம்மா உணவகம்

அம்மா உணவகங்களில் விற்பனை மந்தம்

Published On 2022-01-10 04:18 GMT   |   Update On 2022-01-10 04:18 GMT
பகல் நேரங்களில் ஓட்டல்களில் உணவு வாங்கி சாப்பிட்டதால் அம்மா உணவகங்களை மக்கள் அதிகம் நாடவில்லை. வழக்கமாக வரக் கூடியவர்கள் மட்டுமே சாப்பிட்டனர்.
சென்னை:

பொது ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டதால் ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை.

மேலும் சாலையோர சிறு உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் அம்மா உணவகங்களில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு மக்கள் கூட்டம் வரவில்லை.

முன்கூட்டியே முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால் அதற்கேற்றவாறு உணவை ஏற்பாடு செய்து கொண்டனர். ஆதரவற்றவர்கள், சாலையோர வசிப்பவர்கள் மட்டுமே அம்மா உணவகங்களை நாடினார்கள்.

வழக்கம் போலவே உணவு விற்பனையாகி உள்ளது. காலை - மதியம் உணவுகளுக்கு கூட்டம் வரவில்லை. இரவில் மட்டுமே வழக்கத்தை விட அதிகமாக மக்கள் வந்ததாக அம்மா உணவக ஊழியர்கள் தெரிவித்தனர்.

பகல் நேரங்களில் ஓட்டல்களில் உணவு வாங்கி சாப்பிட்டதால் அம்மா உணவகங்களை மக்கள் அதிகம் நாடவில்லை. வழக்கமாக வரக் கூடியவர்கள் மட்டுமே சாப்பிட்டனர்.

சென்னையில் 403 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இங்கு தினமும் 1.75 லட்சம் பேர் உணவு அருந்தி வருகிறார்கள். குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் கூலித்தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இதுகுறித்து அம்மா உணவக ஊழியர் ஒருவர் கூறும்போது, “வழக்கமாக நடக்கும் வியாபாரத்தை விட அதிகம் விற்பனையாகும் என்று எதிர்பார்த்தோம். அதற்காக கூடுதலாக உணவு பொருட்கள் தயார் நிலையில் வைத்திருந்தோம். யாரும் உணவு இல்லை என்று திரும்பி செல்லக்கூடாது என்ற அடிப்படையில் தயார் நிலையில் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை. காலை-மதியத்தை விட இரவில் சாப்பாத்தி சாப்பிட அதிகம் பேர் வந்தனர். இதனால் கூடுதலாக சாப்பாத்தி தயாரித்து வழங்கினோம்” என்றார்.
Tags:    

Similar News