தமிழ்நாடு
டிடிவி தினகரன்

ராஜேந்திரபாலாஜி ஓடி ஒளிவது நல்லதல்ல- டி.டி.வி.தினகரன்

Published On 2021-12-31 07:18 GMT   |   Update On 2021-12-31 07:18 GMT
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
தஞ்சாவூர்:

தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இலக்கை அடையும் வரை நாங்கள் துவண்டு போக மாட்டோம். தேர்தல் தோல்விகளால் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைத்தால் அது அவர்களது தவறு. நாங்கள் ஒரு சமூகப் பொறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் . அரசியலுக்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய இயக்கம் அ.ம.மு.க. கிடையாது.

மோசடி புகாரில் போலீசாரால் தேடப்படும் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓடி ஒளிவது நல்லதல்ல. தைரியமாக சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் நல்லது.

கொரோனா தொற்று சமூக பரவலாக ஆகிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறி வரும் நிலையில் தமிழக முதல்-அமைச்சரே தஞ்சை, திருச்சியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இது எந்த விதத்தில் நியாயம்.

இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் நீதிமன்றத்தில் சென்று தான் தடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மக்களுடைய மறதிதான் தி.மு.க.வின் மூலதனம். எதையெல்லாம் ஆறு மாதத்திற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்தார்களோ அதை எல்லாம் தற்போது ஆதரிக்கிறார்கள்.

முன்பு கருப்புக்கொடி காட்டி கோபேக் மோடி என சமூக வலைதளங்களில் டிரெண்டாகி கொண்டிருந்தது. தற்போது அதுவே வெல்கம் மோடி என்றாகிவிட்டது. பிரதமர் மோடி என்றைக்குமே பகையாளி அல்ல. தமிழ்நாடு மக்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News