தமிழ்நாடு
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி- குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

Published On 2021-12-25 04:28 GMT   |   Update On 2021-12-25 04:28 GMT
ஆன்லைனில் பதிவு செய்து மணல் பெறுவதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதன்மூலம் கட்டுமான பணிக்கு தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல்லில், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடனை தள்ளுபடி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் நிறைவுபெற்று விட்டன. மேலும் நகைகளை திரும்ப கொடுப்பதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டது. எனவே (15ந் தேதி) பொங்கல் பண்டிகைக்கு முன்பு நகைகள் திரும்ப கொடுக்கப்படும்.

நகைக்கடன், சுயஉதவிக்குழு கடன் உள்பட கூட்டுறவுத்துறை மூலம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டியது உள்ளது. எனவே நிதி நிலைக்கு உட்பட்டு பொங்கல் பரிசு தொகை குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.

ஆன்லைனில் பதிவு செய்து மணல் பெறுவதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதன்மூலம் கட்டுமான பணிக்கு தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News