தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. போராட்டம் தள்ளிவைப்பு

Published On 2021-12-09 07:30 GMT   |   Update On 2021-12-09 07:31 GMT
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வின் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

மக்கள் பிரச்சினையில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தவில்லை என்று கூறி மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வின் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு 11-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.


இப்போது மீண்டும் வருகிற 17-ந்தேதிக்கு (வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. சார்பில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வருகிற 11-ந் தேதி அன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்துடைய மறைவையொட்டி, வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு- ஹெலிகாப்டர் விபத்து சதியா?: விசாரணை தீவிரம்

Tags:    

Similar News