தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி மீதான தாக்குதலை கண்டித்து தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி மீதான தாக்குதலை கண்டித்து தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-12-06 09:01 GMT   |   Update On 2021-12-06 09:01 GMT
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு வந்த முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் அவரது கார் மீது காலணி, மற்றும் கற்கள் வீசப்பட்டது. அப்போது அங்கு இருந்த அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், ஜெயலலிதா நினைவிடத்தில் ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுக்கு அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்து கலவரத்தை தூண்டியதாக தமிழக அரசை கண்டித்தும் தர்மபுரி 4 ரோட்டில் அண்ணா சிலை முன்பு தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று திடீர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இரு கட்சிகளுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட தமிழக அரசை கண்டித்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். 


Tags:    

Similar News