தமிழ்நாடு
கடும் பனி மூட்டத்துக்கு மத்தியில் பயணித்த ரெயில்

கோவையில் இன்று காலை கடும் பனிமூட்டம்- வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

Published On 2021-12-05 04:50 GMT   |   Update On 2021-12-05 04:50 GMT
கோவையில் நேற்று மழை பெய்திருந்ததாலும், இன்று பனி மூட்டமாக இருந்ததாலும் கடும் குளிர் நிலவியது. குளிரை தாங்க முடியாமல் முதியவர்களும், குழந்தைகளும் அவதிப்பட்டனர்.
கோவை:

கோவையில் நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால் கோவை நகரமே வெள்ளக்காடானது. ரெயில்வே சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கி நின்றது.

வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. கே.ஜி. தியேட்டர் ரோடு, கோர்ட்டு ரோடு, ரெயில்வே ரோடு, அவினாசி சாலை, பெரிய கடை வீதி, உக்கடம் சாலை, அவினாசி சாலை, காந்திபுரம் என எங்கு பார்த்தாலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

நேற்று மழை பாதிப்பு என்றால் இன்று காலை கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தியது. காலை 7 மணி வரை பனி மூட்டம் அதிகம் காணப்பட்டது. காலையில் விடிந்த பிறகும் இருள் சூழ்ந்தே இருந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் விளக்கை ஒளிர விட்டபடியே வாகனங்களை இயக்கினர். நேற்று மழை பெய்திருந்ததாலும், இன்று பனி மூட்டமாக இருந்ததாலும் கடும் குளிர் நிலவியது. குளிரை தாங்க முடியாமல் முதியவர்களும், குழந்தைகளும் அவதிப்பட்டனர்.

காலை 7 மணிக்கு பிறகு மெல்ல மெல்ல பனி விலகி சூரிய ஒளி தென்பட்டது. அதன்பின்னர் வெயில் சுட்டெரித்தது.

இதற்கிடையே கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




Tags:    

Similar News