செய்திகள்
ரோப்கார் சேவை

பழனியில் பராமரிப்பு பணிக்காக நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்

Published On 2021-11-28 05:08 GMT   |   Update On 2021-11-28 05:08 GMT
பழனி முருகன் கோவிலில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி:

3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் திருவிழா என வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு ரோப்கார், விஞ்சு மற்றும் யானை, படிப்பாதைகள் வழியாக பக்தர்கள் சென்று வருகின்றனர்.

3 நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு சென்று விடலாம் என்பதால் பல்வேறு தரப்பினரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். ரோப்கார் தினமும் ஒரு மணி நேரம், மாதம் ஒருநாளும் வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும். அப்போது ரோப்கார் பெட்டிகள், பல் சக்கரங்கள், இழுவை கம்பிகள் ஆகியவற்றை பராமரித்து வருகின்றனர்.

அதன்படி நாளை பராமரிப்பு பணி உள்ளதால் ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரெயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News