செய்திகள்
போராட்டத்தில் பேசிய விஜய் வசந்த் எம்.பி.

மார்த்தாண்டம்-விரிகோடு ரெயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கோரி தர்ணா போராட்டம்: விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு

Published On 2021-11-22 05:03 GMT   |   Update On 2021-11-22 05:45 GMT
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ரெயில்வே கிராஸிங் பகுதியை சென்று பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்- விரிகோடு ரெயில்வே கிராசிங்கில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கேட்டும், மாற்று வழியாக மேம்பாலம் அமைக்க முயற்சி செய்யும் அதிகாரிகளை கண்டித்தும்  விரிகோடு சந்திப்பில்  அனைத்துக்கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு போராட்டக் குழுத் தலைவர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். புலவர் அருளப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசியதாவது:- இதற்கு முன்பு இந்த ரெயில்வே மேம்பாலத்திற்கு எனது அப்பா போராடி - பொறியாளர்களுடனும், மாவட்ட ஆட்சியாளருடனும் , பேச்சுவார்த்தை நடத்தினார்.

தற்போது இந்த விரிகோடு மக்களுக்கு  எது நல்லதோ அதை நான் செய்வேன். அதேபோல் எல்லா துறையினரையும் இங்கு வரவழைத்து நடவடிக்கை எடுப்பேன். மறு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து ரெயில்வே மேம்பாலத்தை இந்த மார்த்தாண்டம்  விரிகோடு ரெயில்வே கிராசிங்  வழியாக கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார்.

அதன் பின்னர் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ரெயில்வே கிராஸிங் பகுதியை சென்று பார்வையிட்டனர். மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட சேவா தள தலைவர் ஜோசப் தயாசிங் உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News