செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்தது

Published On 2021-10-27 05:51 GMT   |   Update On 2021-10-27 05:51 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,064-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை சில நாட்களுக்கு முன்பு குறைந்தபடி இருந்ததால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதற்கிடையே கடந்த 23-ந்தேதி தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து 2 நாட்கள் விலை உயர்ந்து இருந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.224 குறைந்து ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 64-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 508-க்கும் விற்றது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.69 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.20-க்கு விற்றது.
Tags:    

Similar News