செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு

Published On 2021-10-23 07:09 GMT   |   Update On 2021-10-23 07:09 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,120-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் சில வாரங்களுக்கு முன்பு ஏற்றத்தாழ்வு நிலவி வந்தது.

இதையடுத்து பவுன் ரூ.36 ஆயிரத்துக்குள் கீழ் வந்தது. அதன் பின் விலையில் தொடர்ந்து குறைவு காணப்பட்டு வந்த நிலையில் சில நாட்களாக தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

நேற்று பவுனுக்கு ரூ.40 உயர்ந்துரூ.35 ஆயிரத்து 896-க்கு விற்றது. இதனால் ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்தை நெருங்கியது.

இந்த நிலையில் இன்று தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 120-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,515 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.69 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.90-க்கு விற்கிறது.
Tags:    

Similar News