செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளுடன் ரோந்து சென்ற இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள்

மண்டபம் கடல் பகுதியில் 500 கிலோ கடல் அட்டைகள், படகு பறிமுதல்

Published On 2021-10-20 05:41 GMT   |   Update On 2021-10-20 05:41 GMT
கடல் அட்டைகள் மற்றும் பதிவு எண் இல்லாத நாட்டுப்படகு ஆகியவற்றை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்:

கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கடல் பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இப்பகுதியில் சட்ட விரோதமாக தொடாந்து கடல் அட்டைகள் பிடித்து பதப்படுத்தி இலங்கை கடத்திச்சென்று அங்கிருந்து சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது, பல் வேறு துறையினர் கண்காணிப்பை மீறி கடத்தல் தொழில் அமோகமாக நடந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வேதாளை உள்ளிட்ட கடல் பகுதிகளில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், இந்திய கடலோர காவல்படை கமாண்டர் ‌ஷனோவாஸ் உதவி கமாண்டர் மாருதி, வனத்துறை அலுவலர் வெங்கடேஷ், மகேந்திரன் மற்றும் கடலோர காவல்படையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் கூட்டு ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மண்டபம் வடக்கு துறைமுகம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நாட்டுப்படகை சோதனையிட்டபோது, அதில் தடை செய்யப்பட்ட 500 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரிய வந்தது. கடல் அட்டைகள் மற்றும் பதிவு எண் இல்லாத நாட்டுப்படகு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News