செய்திகள்
கோப்புபடம்

மத்திய அரசு திட்டத்தின் கீழ் திருப்பூரில் சுகாதார நிலைய கட்டிடப்பணிகள் தீவிரம்

Published On 2021-10-18 08:56 GMT   |   Update On 2021-10-18 08:56 GMT
டி.ஆலம்பாளையம், கரட்டுப்பாளையத்தில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தில் துணை சுகாதார நிலைய கட்டிடம் உட்பட ரூ.12.28 கோடி மதிப்பிலான பணிகள் நடந்து வருகின்றன. 

அதன்படி நம்பியாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் முன்புற ரோடு, ரூ.1.14 கோடி மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடப்பணிகள் நடக்கின்றன. 

சுண்டக்காம்பாளையத்தில் ரூ. 30 லட்சம், தாயம்பாளையம், வேலூர், எரிசனம்பட்டி, வெங்கிட்டாபுரம், மலையாண்டிபட்டிணம், போடிபட்டி, பெருமாநல்லூர், முறியாண்டம்பாளையம், சோமவாரப்பட்டி பகுதிகளில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்படுகிறது.

டி.ஆலம்பாளையம், கரட்டுப்பாளையத்தில் தலா ரூ.20 லட்சம்  மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.  

சாவடிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 48 லட்சத்தில் புறநோயாளிகள் பிரிவு, உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடியில் புதிய கட்டிடம், மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் ரூ.15லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சித்தா பிரிவு கட்டிடம் கட்டும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்:

துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. மொத்தம் ரூ.12.28 கோடி மதிப்பிலான பணிகள் நடந்து வருகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடிக்க கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார் என்றனர். 
Tags:    

Similar News