செய்திகள்
மெரினா கடற்கரை சாலை

மெரினாவில், 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

Published On 2021-10-15 11:24 GMT   |   Update On 2021-10-15 11:24 GMT
மெரினா கடற்கரை சாலையில் 4 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் வருகிற 21-ந்தேதி காவலர் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இதையடுத்து மெரினா கடற்கரை சாலையில் 4 நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்கள் காரணீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில் இடது புறம் திரும்பி காரணீஸ்வரர் பகோடா தெரு, அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அல்லது காமராஜர் சாலை செல்லலாம்.

சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பஸ்கள் சாந்தோம் சிக்னலில் இடதுபுறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர் பிரதான சாலை மற்றும் பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை மெயின் ரோடு இடது புறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலை சென்று அவரவர் இலக்கை அடையலாம்.

கண்ணகி சிலையில் இருந்து காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம், காரணீஸ்வரர் கோவில் சந்திப்பிற்கு செல்லலாம்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கண்ணகி சிலைக்கும் மற்றும் கலங்கரை விளக்கம் வழியாக சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை கலங்கரை விளக்கம் எம்.ஆர்.டி.எஸ். அருகில் இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலை சர்வீஸ் ரோடு வழியாக காமராஜர் சாலைக்கும், கடற்கரை சாலை சர்வீஸ் ரோடு வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News