செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 73.58 அடியாக சரிந்தது

Published On 2021-09-26 04:37 GMT   |   Update On 2021-09-26 04:37 GMT
தண்ணீர் திறப்பை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால் நேற்று 73.69 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 73.58 அடியாக சரிந்தது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது.

இதனால் கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 8,092 கன அடி வீதம் தண்ணீர் வந்தது.

இன்று நீர்வரத்து குறைந்து விநாடிக்கு 6,831 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பாசனத்துக்காக அணையில் இருந்து விநாடிக்கு 7,000 கன அடி தண்ணீர், கிழக்கு, மேற்கு கரை கால்வாய் பாசனத்துக்கு 800 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

தண்ணீர் திறப்பை விட, நீர்வரத்து குறைவாக இருப்பதால் நேற்று 73.69 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 73.58 அடியாக சரிந்தது.

Tags:    

Similar News