செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் 1 கோடியே 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- ஐகோர்ட்டில் அரசு அறிக்கை

Published On 2021-06-22 01:46 GMT   |   Update On 2021-06-22 01:46 GMT
தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி இலவச தடுப்பூசி போடப்படுகிறது.
சென்னை: 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி இலவச தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த 17-ந்தேதி வரை மத்திய அரசிடம் இருந்து ஒரு கோடியே 18 லட்சத்து 17 ஆயிரத்து 690 தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டுள்ளன. 17-ந்தேதி வரை ஒரு கோடியே 12 லட்சத்து 88 ஆயிரத்து 648 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக மாநிலம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் 66 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News