செய்திகள்
டிடிவி தினகரன்

நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும்- டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

Published On 2021-06-20 09:08 GMT   |   Update On 2021-06-20 09:08 GMT
சட்டசபை முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை போல, நாளை தொடங்க இருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரிலேயே ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இதன் மூலம் 2010-ம் ஆண்டு மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்த போது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் ‘டாக்டர்’ கனவை சிதைக்கும் ‘நீட்’ தேர்வை கொண்டு வந்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள தற்போது கிடைத்து இருக்கும் நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News