செய்திகள்
கொரோனா வைரஸ்

சேலத்தில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று

Published On 2021-06-19 06:51 GMT   |   Update On 2021-06-19 06:51 GMT
சேலம் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் 47 சதவீதம் பேரும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 39 சதவீதம் பேரும், சிகிச்சை மையங்களில் 27 சதவீதம் பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 541 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சேலம் மாநகராட்சியில் மட்டும் 99 பேர் அடங்குவர்.

இதனால் சேலம் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 764 ஆக அதிகரித்துள்ளது. இதில் 76 ஆயிரத்து 224 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே கொரோனாவால் சேலம் மாவட்ட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 23 பேர் உயிரிழந்தனர். இதனால் சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக உயர்ந்துள்ளது. தொற்று குறைந்தாலும் சாவு எண்ணிக்கை அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிகிச்சை மையங்களில் கொரோனா சிகிச்சைக்கு 9 ஆயிரத்து 600 படுக்கைகள் உள்ளன. மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இதில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளது.

தற்போது தொற்று பாதிப்பு வேகமாக குறைய தொடங்கி உள்ளது. மேலும் குணம் அடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் 60 சதவீதம் படுக்கைகளுக்கு மேல் காலியாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் வீட்டில் 650-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 1500 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆக்சிஜன் வசதியுடன் 1100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்ட ஆஸ்பத்திரிகளில் 47 சதவீதம் பேரும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 39 சதவீதம் பேரும், சிகிச்சை மையங்களில் 27 சதவீதம் பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

Tags:    

Similar News