செய்திகள்
அமைச்சர் சேகர்பாபு

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததும் கோவில்கள் திறக்கப்படும்- அமைச்சர் சேகர்பாபு

Published On 2021-06-18 09:34 GMT   |   Update On 2021-06-19 10:41 GMT
கோவில்களில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் சிறப்பு பூஜைகளை தமிழக அரசு ரத்து செய்யவில்லை.

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற் கொண்டார்.

கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவில் யானை பார்வதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், தேவைப்படும் சிகிச்சை குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

மேலும் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்தில் சேதம் அடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் குறித்தும், அதற்கான எற்பாடுகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் உடன் சென்றனர்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வந்த பிறகு கோவில்கள் திறக்கப்படும்.

கோவில்களில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் சிறப்பு பூஜைகளை தமிழக அரசு ரத்து செய்யவில்லை.

சென்னையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வேகமாக குறைந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News