செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது

Published On 2021-06-18 06:54 GMT   |   Update On 2021-06-18 06:54 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,640-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலையில் கடந்த சில வாரங்களாக ஏற்ற-தாழ்வு காணப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் முதல் விலை குறைந்தபடி இருந்தது. நேற்று சவரனுக்கு ரூ.616 குறைந்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்றது.

இந்த நிலையில் இன்று 3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது. இதனால் சவரன் மீண்டும் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.35 ஆயிரத்து 640-க்கு விற்றது. ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4 ஆயிரத்து 455 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 சரிந்து ரூ.74 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்கிறது.

Tags:    

Similar News