செய்திகள்
ரேஷன் கடை

ரேஷன் கடை பணிகளில் திடீர் மாற்றம்- தமிழக அரசு உத்தரவு

Published On 2021-06-08 02:01 GMT   |   Update On 2021-06-08 02:24 GMT
11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை முற்பகல் நேரத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழக்கம்போல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். இந்த சூழலில் ரேஷன் கடைகளின் பணி நேரம் குறித்து உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. 7-ந் தேதி முதல் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும்; பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும். மறு உத்தரவு வரும் வரை இந்த வேலை நேரம் நடைமுறையில் இருக்கும்.




கொரோனா நிவாரணத்திற்கான 2-ம் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பு 15-ந் தேதி முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல ஏதுவாக டோக்கன் வினியோகத்தை 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை கடைப் பணியாளர்கள் பிற்பகல் நேரத்தில் அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும். 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை முற்பகல் நேரத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழக்கம்போல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News