செய்திகள்
ரெயில்

சென்னை எழும்பூர்-தஞ்சாவூர், கோவை-நாகர்கோவில் ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2021-05-18 02:01 GMT   |   Update On 2021-05-18 02:01 GMT
பயணிகள் வரத்து குறைந்ததால் திருச்சி-ராமேசுவரம், கோவை-நாகர்கோவில் உள்ளிட்ட ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயணிகள் வரத்து குறைந்ததால் கீழ்க்கண்ட ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

* திருச்சி-ராமேசுவரம் (06849), ராமேசுவரம்-திருச்சி (06850), கோவை-நாகர்கோவில் (02668), தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் (06866) சிறப்பு ரெயில்கள் வருகிற 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், நாகர்கோவில்-கோவை (02667), சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் (06865) சிறப்பு ரெயில்கள் வருகிற 20-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரையிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

* லோக்மான்ய திலக் டெர்மினாஸ்-கொச்சுவேலி (06163) சிறப்பு ரெயில் 21-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், கொச்சுவேலி-லோக்மான்ய திலக் டெர்மினாஸ் (06164) சிறப்பு ரெயில் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News