செய்திகள்
கோப்புப்படம்

தமிழ்நாட்டில் 25 நாட்களுக்குள் 5 லட்சம் பேருக்கு கொரோனா

Published On 2021-05-15 06:35 GMT   |   Update On 2021-05-15 06:35 GMT
கொரோனா பரவலில் உச்சத்தில் இருந்த சென்னையில் கடந்த 2 நாட்களாக தொற்று எண்ணிக்கை சரிய தொடங்கி இருக்கிறது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

இருப்பினும் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கடந்த மாதம் 19-ந்தேதியில் இருந்து கடந்த 25 நாட்களுக்குள் 5 லட்சத்து 28 ஆயிரத்து 985 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த கால கட்டத்தில் 3899 பேர் இறந்தும் இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 31,892 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,31,377 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பரவலில் உச்சத்தில் இருந்த சென்னையில் கடந்த 2 நாட்களாக தொற்று எண்ணிக்கை சரிய தொடங்கி இருக்கிறது.

நேற்றைய பாதிப்பு 6,538 ஆக இருந்தது. இது அதற்கு முந்தைய நாள் பாதிப்பை விட 453 குறைவு. சென்னையில் இதுவரை 4,25,603 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 44,313 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதே போல் கொரோனா உயிரிழப்பும் சிறிதளவு குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 288 பேர் உயிரிழந்தனர். அதில் சென்னையில் மட்டும் 74 பேர் இறந்தனர். இதுவும் முந்தைய நாள் எண்ணிக்கையை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கல்பட்டில் 21 பேரும், சேலத்தில் 18 பேரும், காஞ்சிபுரத்தில் 17 பேரும், திருவள்ளூரில் 14 பேரும் நேற்று ஒரே நாளில் இறந்திருக்கிறார்கள்.

நேற்று ஒரே நாளில் 20,037 பேர் குணமாகி வீடு திரும்பி இருக்கிறார்கள். இதுவரை மொத்தம் 13,18,982 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இதுவரை 2.4 கோடி பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News