செய்திகள்
உயிரிழப்பு

சேலத்தில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை வாங்க மறுத்த தந்தை

Published On 2021-05-15 03:41 GMT   |   Update On 2021-05-15 03:41 GMT
கொரோனா தொற்றால் தனது மகள் இறந்ததால் உடலை தாரமங்கலம் பகுதியில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று பெண்ணின் தந்தை கூறினார்.
சேலம்:

சேலம் தாரமங்கலத்தை அடுத்த பவளத்தானூர் பகுதியில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்த 33 வயது பெண்ணுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா உறுதியானது. இதை தொடர்ந்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்பு அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது உடல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. உடலை அவரது தந்தை வாங்கி செல்ல மறுத்துவிட்டார். கொரோனா தொற்றால் தனது மகள் இறந்ததால் உடலை தாரமங்கலம் பகுதியில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். எனவே நீங்களே உடலை அடக்கம் செய்துவிடுங்கள் என போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பலியான பெண்ணின் தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. டாக்டர்கள் மற்றும் போலீசார் வெகு நேரம் பேசியபின்னர் அந்த பெண்ணின் தந்தை உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதித்தன‌ர். எனினும் தாரமங்கலம் கொண்டு செல்லாமல் சேலத்தில் உள்ள மயானத்திலேயே அந்த பெண்ணின் உடலை தகனம் செய்தனர்.

Tags:    

Similar News