செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 2 ஆயிரம் உணவு பொட்டலங்கள்

Published On 2021-05-14 04:11 GMT   |   Update On 2021-05-14 04:11 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து வழங்கப்படும் உணவு பொட்டலங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மதுரை:

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்கள் சார்பில் அருகில் உள்ள அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 2 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கோ.தளபதி நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

அரசு உத்தரவின்பேரில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 2 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது

முதல் நாளில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தினமும் ஒரு வகையான சாதம் என்ற வகையில் வழங்கப்படும். உணவு பொட்டலங்கள் மீனாட்சி அம்மன் கோவிலில் தயாரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கு வழங்கப்படும். உணவு பொட்டலங்களுடன் குடிநீர், கபசுர குடிநீர், முக கவசம் போன்றவையும் வழங்கப்படும்.

கோவிலில் இருந்து வழங்கப்படும் உணவு பொட்டலங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News