செய்திகள்
ரெயில்

கோவையில் இருந்து செல்லும் 8 ரெயில்கள் ரத்து

Published On 2021-05-13 07:42 GMT   |   Update On 2021-05-13 07:42 GMT
சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை திருப்பூர், போத்தனூர் வழியாக மங்களூர் செல்லும் ரெயில் மற்றும் மங்களூரில் இருந்து சென்னை வரக்கூடிய ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக பயணிகள் ரெயில் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். பெரும்பாலான ரெயில்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் போதிய வருமானம் இல்லாததால் சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் கோவை வழியாகவும், கோவையில் இருந்தும் செல்லக்கூடிய 8 ரெயில்களை ரத்து செய்துள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், பாபநாசம், ஈரோடு வழியாக கோவைக்கு வரும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டது. இதேபோல கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லக்கூடிய சிறப்பு ரெயிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை திருப்பூர், போத்தனூர் வழியாக மங்களூர் செல்லும் ரெயில் மற்றும் மங்களூரில் இருந்து சென்னை வரக்கூடிய ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர், நெல்லை, திருப்பூர், பீளமேடு வழியாக கோவைக்கு தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலிலும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லக்கூடிய ரெயிலும் ரத்து செய்யப்பட்டது.

கோவையில் இருந்து போத்தனூர், உப்பழா, கண்ணூர் வழியாக செல்லக்கூடிய மங்களூர் ரெயிலும், மங்களூரில் இருந்து கோவைக்கு வரும் ரெயிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ரெயில்கள் அனைத்தும் நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அகர்தலாவில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் 19-ந் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 19-ந் தேதி மாலை 5 மணிக்கு அகர்தலாவில் இருந்து புறப்பட்டு 22-ந் தேதி இரவு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை சென்றடையும். இதில் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இந்த ரெயில் தர்மா நகர், நியூகரிம்கஞ்ச், பாதர்பூர், குவாஹாத்தி, காமாக்யா, சேலம், ஈரோடு, கோவை ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News