செய்திகள்
முக அழகிரி

மதுரையில் மு.க.அழகிரி கொரோனா தடுப்பூசி போட்டார்

Published On 2021-04-23 09:39 GMT   |   Update On 2021-04-23 09:41 GMT
மதுரை மாவட்டத்தில் 151 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 3213 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 495 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.

மதுரை மாவட்டத்தில் நோய் பாதிப்புக்கு ஆளான 2511 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர வெளியூர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 241 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பல்வேறு மையங்களில் போடப்பட்டு வருகிறது.

முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி இன்று காலை மதுரை பனகல் சாலையில் உள்ள இளங்கோ மேல்நிலைப்பள்ளி கொரோனா தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதேபோல் மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனியும் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜுன் குமார் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 151 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு நேற்று மட்டும் 3213 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மதுரை மத்திய ஜெயிலில் 79 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளோம்.

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை இதுவரையில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 559 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது” என்று தெரிவித்து உள்ளார்

Tags:    

Similar News