செய்திகள்
டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு திருச்செந்தூர் வருவாய் தாசில்தார் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை

8ம் ஆண்டு நினைவு நாள்- டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு திருச்செந்தூர் தாசில்தார் மரியாதை

Published On 2021-04-19 06:33 GMT   |   Update On 2021-04-19 06:33 GMT
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினமான இன்று அவரது மணிமண்டபத்தில் உள்ள முழு உருவ வெண்கல சிலைக்கு அரசு சார்பில் திருச்செந்தூர் வருவாய் தாசில்தார் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்செந்தூர்:

பத்திரிகை, ஆன்மீகம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ள மணிமண்டபத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசு சார்பில் திருச்செந்தூர் வருவாய் தாசில்தார் முருகேசன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வலிங்கம், வேல்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக காயாமொழி தலைவரும், தக்கார் பிரதிநிதியுமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில், காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் அக்தார் வரதராஜன் ஆதித்தன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் ஆதித்தன், ராஜன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநிலத்தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ்ஆதித்தன், தொழிலதிபர் தண்டுபத்து ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன் தலைமையில் செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ்,பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய ஜெசிலி, ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கவிநேசன் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் உறுப்பினர்கள் அம்பிகண்ணன், அஜித்குமார், அரசப்பன், காமராஜ், சண்முகசுந்தரம்,



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார் தலைமையில் நிர்வாகிகளும், திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு தலைமையில் ஆழ்வார்திருநகரி கிழக்கு வட்டார தலைவர் பாலசிங், ஓ.பி.சி.மாவட்ட தலைவர் ராஜ்குமார், ஆத்தூர் நகர தலைவர் சின்னத்துரை ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News