செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளராக நீதிபதி தனபால் நியமனம்

Published On 2021-04-14 01:47 GMT   |   Update On 2021-04-14 01:47 GMT
சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமைப் பதிவாளராக நீதிபதி பி.தனபாலை நியமித்து, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி உத்தரவின்படி, கீழ்க்கண்ட மாவட்ட நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்யப்படுகின்றனர். புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி பி.தனபால் சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளராக நியமிக்கப்படுகிறார். அதேபோல, கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி கே.கோவிந்தராஜன் திலகவதி சென்னை ஐகோர்ட்டு (மாவட்ட நீதித்துறை) பதிவாளராகவும், சென்னை 8-வது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி டி.லிங்கேஸ்வரன் தமிழ்நாடு மாநில ஜுடிசியல் அகாடமி இயக்குனராகவும், நாகை மாவட்ட முதன்மை நீதிபதி எம்.என்.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டின் (ஜுடிசியல்) பதிவாளராகவும், மாவட்ட நீதிபதி எம்.சாய்சரவணன் ஐகோர்ட்டு லஞ்ச ஒழிப்புப் பிரிவு பதிவாளராகவும், தர்மபுரி மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி கே.சீதாராமன் சென்னை ஐகோர்ட்டு (ஆய்வுப் பிரிவு) கூடுதல் பதிவாளராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

கோவை கூடுதல் மாவட்ட நீதிபதி கே.பூர்ணஜெயா ஆனந்த் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையின் (ஜுடிசியல்) பதிவாளராகவும், தமிழ்நாடு மாநில ஜுடிசியல் அகாடமியின் கூடுதல் இயக்குனர் ஏ.கே.மெகபூப் அலிகான் தமிழ்நாடு சமரசத் தீர்வு மையத்தின் இயக்குனராகவும், சென்னை 16-வது செசன்சு கோர்ட்டு நீதிபதி ஏ.சரவணகுமார் சென்னை ஐகோர்ட்டு தகவல்தொடர்பு மற்றும் புள்ளியியல் பிரிவு பதிவாளராகவும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி கே.சுதா சென்னை ஐகோர்ட்டு சட்டப்பணி ஆணைக்குழு செயலாளராகவும், தென்காசி விரைவு கோர்ட்டு நீதிபதி சி.விஜயகுமார் ஐகோர்ட்டு லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் பதிவாளராகவும், சேலம் மகளிர் கோர்ட்டு நீதிபதி ஜி.ஸ்ரீராமஜெயம் சென்னை ஐகோர்ட்டு சிறப்புப்பிரிவு பதிவாளராகவும், சென்னை ஐகோர்ட்டு ஜுடிசியல் பதிவாளர் எம்.ஜோதிராமன் சென்னையில் உள்ள நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், தமிழ்நாடு சமரசத் தீர்வு மையத்தின் இயக்குனர் கே.அய்யப்பன் செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிபதியாகவும் நியமிக்கப்படுகின்றனர்.

சென்னை ஐகோர்ட்டு லஞ்ச ஒழிப்புப் பிரிவு பதிவாளர் ஆர்.பூர்ணிமா மாநில போக்குவரத்துக் கழக மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும், தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் சென்னை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாகவும், சென்னை ஐகோர்ட்டு (மாவட்ட நீதித்துறை) பதிவாளர் வி.தங்கமாரியப்பன் சென்னை கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும், ஐகோர்ட்டு (ஆய்வுப் பிரிவு) கூடுதல் பதிவாளர் எஸ்.அப்துல் மாலிக் தமிழ்நாடு வக்பு வாரிய வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தின் தலைவராகவும், சென்னை ஐகோர்ட்டு தகவல்தொடர்பு மற்றும் புள்ளிவிவரப்பிரிவு பதிவாளர் பி.சுவாமிநாதன் தூத்துக்குடி குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News