செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 98.61 அடியாக சரிந்தது

Published On 2021-04-08 04:56 GMT   |   Update On 2021-04-08 06:24 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட, அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:

தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதைத்தவிர பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று விநாடிக்கு 79 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை கொஞ்சம் அதிகரித்து விநாடிக்கு 91 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட, தொடர்ந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.

இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 98.61 அடியாக சரிந்தது. இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News