செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

தமிழகத்தில் 761 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள்- சுகாதாரத்துறை தகவல்

Published On 2021-02-28 03:09 GMT   |   Update On 2021-02-28 03:09 GMT
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையிலான இணை நோயாளிகள் என, 1.06 கோடி பேருக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
சென்னை:

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 2.77 லட்சம் கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 23.77லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. தற்போது வரை 4.57 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி போடும் பணியை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையிலான இணை நோயாளிகள் என, 1.06 கோடி பேருக்கு நாளை முதல் தடுப்பூசி போடப்பட உள்ளது.

தனியார் மருத்துவமனையிலும் தடுப்பூசிப்போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 761 தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தனியார் மருத்துவமனைகளில் ஒரு முறை தடுப்பூசி போட மத்திய அரசு ஒரு நபருக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி 2 முறை தடுப்பூசி போட ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News