செய்திகள்
பாஸ்டேக்

சேலம் சுங்கச்சாவடிகளில் ஒரே நாளில் 15 ஆயிரம் வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூல்

Published On 2021-02-18 09:38 GMT   |   Update On 2021-02-18 09:38 GMT
பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் பாஸ்டேக் இல்லாமல் வந்த 15 ஆயிரம் வாகனங்களுக்கு இருமடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.
சேலம்:

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை கடக்கும் அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் எனப்படும் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் கட்டணம் செலுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நடைமுறை கடந்த 1-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் சேலம் திட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட சேலம் கருப்பூர், தொப்பூர், வைகுந்தம், விஜயமங்கலம், மேட்டுப்பட்டி, தலைவாசல், கள்ளக்குறிச்சி உள்பட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் சுமார் 1.40 லட்சம் வாகனங்கள் கடந்து சென்றன.

இதில் லாரிகள், கார்கள் உள்பட 15 ஆயிரம் வாகனங்கள் பாஸ்டேக் இல்லாமல் வந்தன. இந்த வாகனங்களுக்கு சுங்க கட்டணம் இரு மடங்கு வசூலிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறும்போது, பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் பாஸ்டேக் இல்லாமல் வந்த வாகனங்களுக்கு இருமடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

பல வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி அருகே அமைக்கப்பட்டிருந்த வங்கிகளின் முகாமுக்கு சென்று உடனுக்குடன் பெற்று சென்றனர். ஓரிரு வாரங்களில் அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் கட்டண முறைக்கு மாறி விடுவார்கள். அப்போது சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்து நிற்கும் நிலை ஏற்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News