செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டி

பதிவு செய்யாமல் கண்ணன் 12 மாடுகளை பிடித்தது கண்டுபிடிப்பு- கோட்டாட்சியர்

Published On 2021-02-03 02:36 GMT   |   Update On 2021-02-03 02:36 GMT
மாடுபிடி வீரராக முறையாக பதிவு செய்யாமல், மருத்துவ பரிசோதனை செய்யாத கண்ணன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று 12 மாடுகளை பிடித்துள்ளார்.
மதுரை:

மதுரை வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம் கலெக்டருக்கு அனுப்பிய விசாரணை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* மாடுபிடி வீரராக முறையாக பதிவு செய்யாமல், மருத்துவ பரிசோதனை செய்யாத கண்ணன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு அனைத்து சுற்றிலும் பங்கேற்று 12 மாடுகளை பிடித்துள்ளார்.

* மாடுகளை அழைத்து வரும் வாடிவாசல் வழியாக வந்து ஆள்மாறாட்டம் செய்து கண்ணன் விளையாடியுள்ளார். ஹரிகிருஷ்ணனின் 33ம் நம்பர் பனியனை அணிந்து கண்ணன் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

* முதல் பரிசாக கார் தருவது பற்றி ஜல்லிக்கட்டு நிர்வாக கமிட்டி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.

* மாவட்ட நிர்வாகம், விழா கமிட்டி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாக கண்ணன், ஹரிகிருஷ்ணன் கூறி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News