செய்திகள்
அர்ஜுன் சம்பத்

அரசியல் அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் சேருவோம்- அர்ஜுன் சம்பத் பேட்டி

Published On 2021-01-26 08:44 GMT   |   Update On 2021-01-26 08:44 GMT
அரசியல் அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் சேருவோம் என இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் ஆன்மிக அரசியல் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் ஆன்மிக அரசியல் மூலம் வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 234 தொகுதியிலும் ஆன்மிக அரசியல் கொள்கை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லப்படும்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதுதான் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வாகும். தமிழக நதிநீர் இணைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அரசியல் அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே கூட்டணியில் சேருவோம். ரஜினி பின்வாங்கி இருக்கலாம்.அதற்காக நாங்கள் ஒரு காலத்திலும் பின்வாங்க மாட்டோம். ஆன்மிக அரசியலுக்கு ரஜினி ஆதரவு கொடுப்பார்.

தமிழகத்தில் சிறுபான்மை ஓட்டுவங்கி என்கின்ற அடிப்படையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் சலுகைகளை வாரி வழங்குகிறார்கள். அதே சமயம் பெரும்பான்மை இந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

ஸ்டாலின் தற்போது வேலை கையில் எடுத்துள்ளார். இதன் மூலம் நாடகமாடி மக்களிடம் ஓட்டு வாங்கி விடலாம். என நினைத்து இரட்டைவேடம் போடுகிறார். அது ஒரு போதும் நடக்காது. 

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நெருக்கடியாக கூட்டம் கூடியதாக இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், மாவட்ட பொறுப்பாளர்கள் அன்பழகன், கிருஷ்ணன் உட்பட பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News