செய்திகள்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நல உதவி வழங்கியபோது எடுத்தபடம்.

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு- நல உதவிகளை வழங்கினார்

Published On 2021-01-22 19:20 GMT   |   Update On 2021-01-22 19:20 GMT
கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, நல உதவிகளை வழங்கினார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். வார்டு 65 - சீனிவாசா நகர் 3-வது தெருவில் திறந்தவெளி நிலத்தில் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கும் பணிக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கன்னியம்மன் கோவிலுள்ள குளத்தினை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து வார்டு 64 - சன்னதி தெருவில் மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டத்தின் கீழ், ஏழை - எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் மருத்துவ சேவை வழங்கும் நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார். திரு.வி.க நகர் குடியிருப்பில் குழந்தைகள் நல்வாழ்வு மையம் மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

பல்லவன் சாலை. ஆரம்ப சுகாதார மையத்தில் காசநோய் சிகிச்சைக்காக கூடுதல் அறைகள் அமைக்கும் பணி, நியாயவிலைக் கடை கட்டும் பணி, கனகர் தெரு, சுந்தரராஜர் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள குளத்தை மேம்படுத்தும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ஜவஹர் நகர் 2-வது வட்ட சாலை. குழந்தைகள் விளையாட்டுத் திடலை மேம்படுத்தும் பணிக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் நல உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகள் 21 பேருக்கு கல்வி உதவித்தொகை, 23 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நல உதவி, 8 பேருக்கு லேப்டாப், 16 பேருக்கு மருத்துவ உதவி, 8 பேருக்கு திருமண உதவி, 12 பேருக்கு தையல் எந்திரம், 5 பேருக்கு மீன்பாடி வண்டி, 5 பேருக்கு 4 சக்கர தள்ளு வண்டி, ஒருவருக்கு 2 சக்கர மோட்டார் பொருத்திய வாகனம், தலா ஒருவருக்கு காது கேட்கும் எந்திரம், இஸ்திரி பெட்டி, மாவு அரைக்கு எந்திரம் வழங்கப்பட்டது. ஒருவருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 3 பேருக்கு உதவி என மொத்தம் 106 பேருக்கு மு.க.ஸ்டாலின் நல உதவிகளை வழங்கினார்.
Tags:    

Similar News