திமுக-வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தின்போது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற உள்ள திமுக எம்.பி.க்கள் அனைவரும் பாராளுமன்ற தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வரும் 26-ம் தேதி பகல் 12 மணிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.