செய்திகள்
கோப்பு படம்

மருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் - மநீம துணைத்தலைவர் மகேந்திரன்

Published On 2021-01-22 10:08 GMT   |   Update On 2021-01-22 10:08 GMT
மருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என மக்கள் நீதிமய்யம் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால், அதற்கு அறுவை சிகிச்சை செய்து இருந்தார்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுவந்தார். அப்போது, அறுவை சிகிச்சை செய்த காலில் அவருக்கு திடீரென மீண்டும் வலி ஏற்பட்டது. 

இதனால் பிரசார நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கமல்ஹாசன் கடந்த 18-ம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு அவரது வலது காலில் மீண்டும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என கடந்த 19-ம் தேதி கமல்ஹாசன் அறிவித்தார். 

இதையடுத்து, மருத்துவமனையில் மருத்துவக்கண்காணிப்பில் இருந்த கமல்ஹாசன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள கமல்ஹாசன் 7 முதல் 10 நாட்கள் வரை மருத்துவ ஓய்வில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மருத்துவ ஓய்வுக்கு ஓய்வுக்கு பின்னரே கமல்ஹாசன் தனது 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என மக்கள் நீதிமய்யம் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News