செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-01-10 06:57 GMT   |   Update On 2021-01-10 06:57 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர்:

கர்நாடக மலைப் பகுதியில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று வினாடிக்கு 1137 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இது இன்று காலை 2384 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 105 அடியாக உள்ளது. அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News