செய்திகள்
திருப்பூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகளை காணலாம்.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 15 குழந்தைகள் பிறந்தன

Published On 2021-01-02 04:36 GMT   |   Update On 2021-01-02 04:36 GMT
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் மட்டும் 15 குழந்தைகள் பிறந்தன.
திருப்பூர்:

பிறந்தநாள் என்பது அனைவருக்கும் மிகவும் ஒரு முக்கியமான நாளாகும். வேறு எந்த நாட்களை மறக்கிறார்களோ இல்லையோ, தங்களது பிறந்தநாளை யாரும் மறப்பதில்லை. இந்த பிறந்த நாளும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற முக்கியமான நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் இருந்தால், அது அந்த நாட்களில் பிறந்தவர்களுக்கு மேலும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.

மேலும் கர்ப்பமான பெண்கள், தங்களுக்கு விசேஷ நாட்களில் தான் குழந்தை பிறக்க வேண்டும் என எண்ணுவார்கள். அந்த வகையில் நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த புத்தாண்டு பண்டிகை நாளில் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் 15 குழந்தைகள் பிறந்துள்ளன.

இது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கிறது. தொழில்நகரம் மற்றும் இங்குள்ள மக்கள் தொகை எண்ணிக்கை போன்றவற்றின் காரணமாக குழந்தை பிறப்பு என்பது மற்ற மாவட்டத்தை விட அதிகமாக இருக்கிறது. இதுவும் இங்கு தொழிலாளர்கள் அதிகம் என்பதால், தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி மனைவியை சிகிச்சைக்காக சேர்க்க அவர்களிடம் போதிய பண வசதி இருப்பதில்லை.

இதன் காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் இங்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. அதன்படி புத்தாண்டான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரை அரசு தலைமை மருத்துவமனையில் 15 குழந்தைகள் பிறந்தன. இதில் 7 ஆண் மற்றும் 8 பெண் குழந்தைகள் அடங்கும். இந்த குழந்தைகளும் நல்ல நிலையில் இருக்கின்றன. வழக்கமான நாட்களை விட விசேஷ நாட்களில் குழந்தைகள் பிறப்பதை பலரும் விரும்புவார்கள். புத்தாண்டில் இந்த குழந்தைகள் பிறந்துள்ளதால், இந்த குழந்தைகளின் பெற்றோரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது அவர்களுக்கு ஒருவித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News