செய்திகள்
மேட்டூர் அணை பூங்கா பூட்டப்பட்டிருந்ததை காணலாம்

புத்தாண்டு தினத்தில் மேட்டூர், ஏற்காட்டில் பூங்காக்கள் வெறிச்சோடின

Published On 2021-01-02 03:07 GMT   |   Update On 2021-01-02 03:07 GMT
புத்தாண்டு தினத்தில் மேட்டூர், ஏற்காட்டில் பூங்காக்கள் மூடப்பட்டதால் வெறிச்சோடின.
மேட்டூர்:

புத்தாண்டு விடுமுறையையொட்டி, சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு பூங்காவுக்கு வருவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் நேற்றும், இன்றும் பூங்கா மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று மேட்டூர் பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதே போல ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு நேற்று சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக நேற்று ஏற்காட்டுக்கு கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள், அடிவாரம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனால் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, படகு இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

அதே நேரத்தில் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு விடுமுறை தினமான நேற்று குவிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்தும், ஆற்றில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
Tags:    

Similar News