செய்திகள்
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மின்இழுவை ரெயில் சேவை தொடங்கியது.

பழனி முருகன் கோவிலில் மின்இழுவை ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்

Published On 2020-12-02 02:09 GMT   |   Update On 2020-12-02 02:09 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பழனி முருகன் கோவிலில் நிறுத்தப்பட்ட மின்இழுவை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது.
பழனி:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பழனி முருகன் கோவிலில் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்தநிலையில் மின்இழுவை ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. 50 சதவீத பயணிகளுடன் மின்இழுவை ரெயில் இயக்கப்பட்டது. முன்னதாக நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மின்இழுவை ரெயில் சேவை தொடங்கியது. இந்த ரெயிலில் பக்தர்கள் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மின்இழுவை ரெயிலில் செல்வதற்கு, 15 நிமிடங்களுக்கு முன்பு காத்திருப்பு மண்டபத்துக்கு பக்தர்கள் வர வேண்டும்.

அங்கு பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். இதில் கொரோனா அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே, மின்இழுவை ரெயிலில் பயணம் செய்ய முடியும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News