செய்திகள்
புழல் ஏரி

தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் புழல் ஏரி

Published On 2020-11-28 02:30 GMT   |   Update On 2020-11-28 02:30 GMT
தொடர் மழையால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் வருகிற நாட்களில் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
செங்குன்றம்:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் புழல் ஏரியும் ஒன்றாகும். இந்த ஏரியில் இருந்து தினந்தோறும் 85 கனஅடி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலம் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும்.

ஏரியின் உயரம் 21.20 அடியாகும். ‘நிவர்’ புயல் கரையை கடந்த நிலையில், கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. புழல் ஏரிக்கு தொடர்ந்து மழைநீர் வருவதால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

மேலும் தற்போது ஏரியில்2 ஆயிரத்து 801 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளதால், ஏரியிலிருந்து நீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் புழல் ஏரியில் வேகமாக நிரம்பி வருவதால் வருகிற நாட்களில் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
Tags:    

Similar News