செய்திகள்
சஸ்பெண்டு

விழுப்புரம் அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி சஸ்பெண்டு

Published On 2020-11-27 05:48 GMT   |   Update On 2020-11-27 05:48 GMT
விழுப்புரம் அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே காந்தலவாடியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு சொந்தமாக 4 சென்ட் இடம் உள்ளது.

இந்த இடத்துக்கு பட்டா மாற்றம் செய்ய கடந்த 24-ந் தேதி சரவணன் மடப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமியை அணுகினார். ஆனால், அவர் பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.2 ஆயிரம் தர வேண்டும் என்று கூறினார்.

அதிர்ச்சி அடைந்த சரவணன், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் சரவணனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கினர்.

இந்த ரூபாய்களை சரவணன் கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமியிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மகாலட்சுமியை கையும்-களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து திருக்கோவிலூர் சப்-கலெக்டர் சாய்வர்ஷினி துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமி ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.

Tags:    

Similar News