நிவர் புயலின் மையப்பகுதி தற்போது கரையை கடந்துள்ளது.
நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடந்தது
பதிவு: நவம்பர் 26, 2020 03:58
நிவர் புயல் (வரைபடம்)
சென்னை:
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது புதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது. இந்நிலையில், புயலின் மையப்பகுதி கரையை கடந்துள்ளது.
புதுச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணி வரை நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் பின் பகுதி தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயலின் பின் பகுதி கரையை கடக்க இன்னும் சில மணி நேரங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிதீவிர புயலாக இருந்த நிவர் தற்போது வலுவிழந்து தீவிர புயலாக குறைந்துள்ளது. ஆனாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
Related Tags :