செய்திகள்
கேஎஸ் அழகிரி

ஏர் கலப்பை பேரணி டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: கே.எஸ்.அழகிரி

Published On 2020-11-25 02:08 GMT   |   Update On 2020-11-25 02:08 GMT
மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 28-ந்தேதி நடத்த திட்டமிட்டிருந்த ஏர் கலப்பை பேரணி, புயல் சீற்றத்தின் காரணமாக டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்றத்தில் விவாதமே நடத்தாமல், மத்திய அரசு இயற்றிய தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து நாளை (வியாழக்கிழமை) ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து தேசிய அளவிலான போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்டவை. நம் நாட்டின் சொத்துகளை கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடித்து செல்வதற்கு அமைதியாக வழியமைத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடவடிக்கை இந்திய மக்களின், குறிப்பாக தொழிலாளர்களின் விருப்பத்துக்கும் நலனுக்கும் எதிரானதாகும்.

எனவே தேசிய வேலை நிறுத்தத்தையொட்டி, நாளை நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரும், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினரும் பெருந்திரளாக இந்த போராட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிற வகையில் அணி திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 28-ந் தேதி நடத்த திட்டமிட்டிருந்த ஏர் கலப்பை பேரணி, புயல் சீற்றத்தின் காரணமாக டிசம்பர் 2-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News